www.garudabazaar.com
iTechUS

சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த திரை பிரபலங்கள்.. டைமிங்ல பிக்பாஸ் கொடுத்த கமெண்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திரை பிரபலங்கள் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் வீட்டினர் சர்ப்ரைஸ் ஆகியுள்ளனர்.

Actor Kavin and Aparna das enters into BiggBoss House

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 6 முடியும் என சொல்லப்படும் நிலையில் பல நெகிழ்ச்சிகரமான அதேவேளையில் அதிர்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

Finale வரை முன்னேறி இருந்த கதிரவன் மூன்று லட்ச ரூபாய் பணமூட்டை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பணப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அமுதவாணன் பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்தது போட்டியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தது.

இதனை தொடர்ந்து, மிட் வீக் எவிக்ஷன் நடைபெறும் என பிக்பாஸ் திடீரென அறிவித்திருந்தார். அதில் மைனா வெளியேறி இருக்கிறார். இப்படியான அடுத்தடுத்து திருப்பங்களுடன் இந்த சீசன் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கவின் மற்றும் நடிகை அபர்ணா தாஸ் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர்.

இருவரையும் போட்டியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது பேசும் கவின்,"சொல்லப்போனா எல்லாமே ஆரம்பிச்சது இங்கதான். பிள்ளையார் சுழி இந்த பிக்பாஸ் வீடுதான். இப்படியே பேசிட்டு இருந்தா நாம எமோஷன் ஆகிடுவோம்" என்கிறார். தொடர்ந்து அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோரிடம் பேசும் கவின்,"உங்க மூணு பேருக்கும் அந்த ஃபீலிங் இருக்கும். ஜாலியா வெளியே வாங்க. அதுக்கப்புறம் எல்லாம் பாத்துக்கலாம்" என்கிறார்.

இதனிடையே பேசும் பிக்பாஸ்,"கவின் உங்களுக்கும் பெட்டிக்கும் என்ன ராசி-ன்னே தெரியல. நேத்து பெட்டி போச்சு. இன்னைக்கு நீங்க வரீங்க" எனச் சொல்கிறார். இதனைக்கேட்ட கவின் மற்றும் போட்டியாளர்கள் உற்சாகமாக சிரிக்கின்றனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor Kavin and Aparna das enters into BiggBoss House

People looking for online information on Aparna Das, Biggboss6Tamil, Kavin will find this news story useful.