www.garudabazaar.com
iTechUS

பணப் பெட்டியுடன் வெளியேற துணிந்த அமுது?.. பரபரப்பான போட்டியாளர்கள்.. BiggBoss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல  நெகிழ்ச்சியான சம்பவங்களால் நிறைந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டி குறித்து தான் தற்போது சமூக ஊடகங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

Amudhavanan and Shivin tries to take Money suitcase in BB

Also Read | "நாக்குல நரம்பு இல்லாம பேசாதீங்க ஷிவின்".. பங்கமாக கலாய்த்த விக்ரமன்..!  

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Amudhavanan and Shivin tries to take Money suitcase in BB

நேரம் ஆக , ஆக பணமும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். அந்த சூழ்நிலையில் அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் பணமூட்டையை கட் செய்து தான் 3 லட்ச ரூபாயுடன் வெளியேறுவதாக பிக்பாஸிடம் தெரிவித்திருந்தார். இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் என சக போட்டியாளர்கள் கவலையுடன் கதிரிடம் தெரிவித்திருந்தனர். தான் பணத்திற்காக இந்த முடிவை எடுக்கவில்லை என சொல்லிய கதிர், பிரியாவிடை பெற்று வீட்டில் இருந்து வெளியேறினார்.

Amudhavanan and Shivin tries to take Money suitcase in BB

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். தற்போது 10 லட்ச ரூபாயை தாண்டி பணம் அதிகரித்திருக்கும் நிலையில் யார் அந்த பெட்டியுடன் வெளியேற போகிறார்கள்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்த சூழ்நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

Amudhavanan and Shivin tries to take Money suitcase in BB

அதில், அமுதவாணனும், ஷிவினும் பணப் பெட்டி குறித்து பேசுகின்றனர். அப்போது ஷிவின்,"ஒரே நேரத்துல பஸ்ஸரை அழுத்தி பணத்தை எடுத்து பாதி பாதி பிரிச்சுக்கலாம்" என்கிறார். தொடர்ந்து அமுதுவிடம் "என்ன பயமா குமாரு?" என கேட்கும் ஷிவின் அவரது கையை பிடித்து பணப்பெட்டியின் அருகே அழைத்துச் செல்கிறார். அப்போது அங்கு அமர்ந்திருக்கும் ஆயிஷா,"யோசிக்கிறார் அமுது அண்ணா. இதுவும் 2 நாளா ஓடிட்டு இருக்கு. நாம ஏதாவது பரபரப்பை உருவாக்குவோமே" என்கிறார்.

இதற்கிடையில் அசீம்,"அவர் எல்லாம் எடுக்க மாட்டாரு" என்கிறார். அமுது பணப்பெட்டியின் பஸ்ஸர் அருகே கை நீட்டியபடி நிற்கிறார். இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

 

Also Read | 'வாத்தி' விக்ரமனையே கண்கலங்க வச்சுட்டாங்கப்பா.. பிக்பாஸ் சொன்ன நெகிழ வைக்கும் விஷயம்..

தொடர்புடைய இணைப்புகள்

Amudhavanan and Shivin tries to take Money suitcase in BB

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Shivin will find this news story useful.