மணிரத்னமின் பொன்னியின் செல்வன் : ஜெயம் ரவியின் Intro Scene.. வெளியான ஷூட்டிங் விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

vikram manirathnam's ponniyin selvan jayam ravi shooting details

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஷ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கும் ஜெயம் ரவியின் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பேங்காக்கில் ஜெயம் ரவியின் அறிமுக காட்சிகளை படமாக்கும் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் சில புகைப்படங்களை பார்த்து, அதை வெகுவாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor