#BREAKING : சிம்பு மாநாடுக்கு ரெடி - ஷூட்டிங் ப்ளான்..வேற லெவல் லொகேஷன் - Mass Details Here!
முகப்பு > சினிமா செய்திகள்சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்து யவரும் அறியாத புதிய தகவல் தெரியவந்துள்ளது.

எஸ்.டி.ஆர் எனும் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கும் இத்திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், ப்ரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் மாநாடு படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. நாளையில் இருந்து சென்னையில் இரண்டு நாட்களுக்கு ஷூட்டிங் நடப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறிய இடைவேளிக்கு பிறகு பிப்ரவரி 27 முதல் படக்குழு ஷூட்டிங்காக ஹைதராபாத்துக்கு செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. மாநாடு படம் அரசியல் சார்ந்த கதையை மையமாக வைத்து உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.