சிவகார்த்திகேயனுடன் 'தெறி' பேபி நைனிகா.. - ஸ்பெஷலான பிறந்தநாள் வாழ்த்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் அவரது பிறந்த நாள் வாழ்த்து  பதிவுகளால் நிறைந்து காணப்படுகின்றன.

Sivakarthikeyan Birthday, Thalaivar 168 actress Meena Shared a photo of Nainika and wished him

மேலும் அவர் தற்போது நடித்து வரும் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (பிப்ரவரி 17) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து 'அயலான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என்று சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில், ''பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா.. உங்கள் வளர்ச்சியை காண மகிழ்ச்சியாக இருக்கிறது'' என குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுடன் நைனிகா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happiest birthday Siva..Lovely to see you grow huge 🤩😍 always wishing you the best @sivakarthikeyan

A post shared by Meena Sagar (@meenasagar16) on

Entertainment sub editor