அயலான் SPL - ஃபர்ஸ்ட் லுக் 7 மணிக்கு.. அதுக்கு முன்னாடி முன்னாள் நாயகியுடன் கொஞ்சம் வில்லத்தனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தின் சர்ப்ரைஸ் லுக் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan ravikumar's ayalaan new pic is out with isha koppikar

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிகுமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இஷா கோபிக்கர் வில்லனாக நடிக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார். சையின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் இத்திரைப்படம் உருவாகிறது.

இந்நிலையில் அயலான் படத்தில் இருந்து புதிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் ரவிகுமார், சிவகார்த்திகேயன், இஷா கோபிக்கர் ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. மேலும் அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 7 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அயலான் படத்தின் படப்பிடிப்பு காட்சியில் இருந்து புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Entertainment sub editor