சிவகார்த்திகேயனின் 'அயலான்' ஃபர்ஸ்ட் லுக்... மாஸ்டர் பிரபலம் கமெண்ட்... - ''குசும்பு Overloaded''
முகப்பு > சினிமா செய்திகள்சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் ஸ்பெஷலாக 'டாக்டர்' மற்றும் 'அயலான்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஏலியனுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் 'அயலான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக அமைந்தது.

இந்நிலையில் 'மேயாதமான்', 'ஆடை' படங்களின் இயக்குநரும், 'மாஸ்டர்' பட வசனகர்த்தாக்களில் ஒருவருமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அயலான்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, ''ஏலியன் சேட்டைகள் ஆரம்பம். வாழ்த்துகள் இயக்குநர் ரவிக்குமார் சகோ. குசும்பு Overload.. 'அயலான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'அயலான்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, இஷா கோபிகர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தை 24 ஏஎம் நிறுவனத்துடன் கூடுதலாக கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகிறது.
Alien Settaigal Aarambam.All the best @Ravikumar_Dir bro. 👌😊. Your take on Alien will be definitely out of the world. Kusumbu overloaded #Ayalaan 👽. https://t.co/NlL2QgNAMF
— Rathna kumar (@MrRathna) February 17, 2020