சிவகார்த்திகேயனின் அயலான் ஃபர்ஸ்ட் லுக் - வேற லெவல் விருந்து காத்திருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முற்றிலும் வித்தியாசமான வடிவத்தில் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan ravikumar a.r.rahman ayalaan first look is out

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிகுமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இஷா கோபிக்கர் வில்லனாக நடிக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமான் சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார். சையின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் இத்திரைப்படம் உருவாகிறது.

இந்நிலையில் அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ஏலியனுடன் சிவகார்த்திகேயன் புல் தரையில் படுத்திருப்பது போல இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த நடிகர் சிவகார்த்திகேயனின் பதிவில், 'புதிய உலகத்தில் இருந்து வந்த என் புதிய நண்பனை அறிமுகப்படுத்துகிறேன்' என பதிவிட்டுள்ளார். இதையடுத்து அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ட்விட்டரில் ட்ரென்ட் அடித்து வருகிறது.

Entertainment sub editor