Fakir Other Banner USA

Breaking : கமலுடன் விக்ரம் இணையும் புதுப்பட ரிலீஸ் தேதி இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Chiyaan Vikram's Kadaram Kondan film will be releasing on July 9 and trailer launch is on July 3rd

‘சாமி ஸ்கொயர்’ திரைப்படத்தையடுத்து விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தில் அக்ஷரா ஹாசனும், நாசரின் மகன் அபி ஹாசனும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீனினாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் எடிட்டிங்கும் செய்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் டீசர் கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை.19ம் தேதி வெளியாகும் என்றும், இப்படத்தின் டிரைலரை வரும் ஜூலை.3ம் தேதி வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.