“First Half-ல கமல் சாருக்கு கம்மியான போர்ஷன்”… ஏன்? – ‘விக்ரம்’ இயக்குனர் லோகேஷ் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு முதல் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள நேர்காணல் கவனம் பெற்றுள்ளது.

Vikram director lokesh exclusive interview after release

Also Read | கார்த்தி & அதிதியின் Chartbuster ‘கஞ்சா பூவு கண்ணால’… விருமன் சிங்கிள் படைத்த சாதனை

ரிலீஸும் வெற்றியும்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Vikram director lokesh exclusive interview after release

வெற்றிக்கொண்டாட்டம்…

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இயக்குனர் லோகேஷின் உதவியாளர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார்.

Vikram director lokesh exclusive interview after release

லோகேஷ் பிரத்யேக நேர்காணல்…

விக்ரம் படத்தின் வெற்றி மழையில் நனைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ் ரிலீஸுக்குப் பின் முதல் முறையாக நமது Behindwoods-க்கு அளித்துள்ள நேர்காணலில் படம் பற்றியும் நடிகர் கமல்ஹாசன் பற்றியும் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். நேர்காணலின் போது “ முதல் பாதியில் கமல் சாருக்கு கம்மியான போர்ஷன் இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளது” பற்றி கேட்டபோது அதற்கு பதிலளித்துள்ளார்.

Vikram director lokesh exclusive interview after release

அதில் “சோதனைப் படங்களையே அதிகமாகப் பண்ணி பழகியவர் கமல் சார். அவர் எனக்குக் கிடைக்கும் போது நான் அவரை மட்டுமே காட்டிட முடியாது.  அதுல கொஞ்சம் சோதனையும் இருக்கணும். அவர மட்டுமே கொண்டாடிடாமல் கதைக்கு கொஞ்சம் நியாயம் செய்ய வேண்டும்.. முதல்பாதில ஒரு டயலாக்தான் சாருக்கு ‘ஆரம்பிக்கலாமா’. அத நான் சொன்னதும்தான் அவருக்கே ஸ்ட்ரைக் ஆச்சு. இரண்டாம் பாதி முழுக்க அவர் மேலதான் இருக்கு. இது பெரிய ரகசியம்லாம் இல்ல. கமல் சார் வரப்போற இடத்த எல்லோரும் கொண்டாடனும்னு நெனச்சோம். இடைவேளைக்கு முன்பே ரசிகர்கள் கமல் சார் எண்ட்ரிய எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க” எனக் கூறியுள்ளார்.

Also Read | வாவ்… ரோலக்ஸ் கையில் ’Rolex’.. அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த கமல்… viral pic

தொடர்புடைய இணைப்புகள்

Vikram director lokesh exclusive interview after release

People looking for online information on Kamal Haasan, Lokesh exclusive interview, Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.