விக்ரம் படத்தின் அசத்தல் வெற்றி.. லோகேஷுக்கு உலகின் விலையுயர்ந்த காரை பரிசளித்த கமல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் உலகின் விலையுயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார்.

Kamal haasan gifted lexus sedan car to lokesh Kanagaraj

Also Read | நயன்தாராவுடன் திருமணம் எப்போ? எங்க? அதிகாரபூர்வமாக அறிவித்த விக்னேஷ் சிவன்! வைரல் வீடியோ

கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Kamal haasan gifted lexus sedan car to lokesh Kanagaraj

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

விக்ரம் படம், அமெரிக்காவில் மூன்று நாட்களில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் அமெரிக்காவில் 11.65 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியுள்ளது.

Kamal haasan gifted lexus sedan car to lokesh Kanagaraj

கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.

மேலும் தெலுங்கானா, ஆந்திராவில் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாயை வசூலித்து உள்ளது.

Kamal haasan gifted lexus sedan car to lokesh Kanagaraj

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது.

Kamal haasan gifted lexus sedan car to lokesh Kanagaraj

இந்த வகை கார்கள் பெட்ரோல் & மின்சாரம் இரண்டிலும் இயங்கும் ஹைப்ரிட் வகை கார்கள் ஆகும்.

Kamal haasan gifted lexus sedan car to lokesh Kanagaraj

Also Read | "கைதி போலவே விக்ரமும் BLOCKBUSTER".. ராமேஸ்வரம் கோயிலில் லோகேஷூடன் பிரபல இயக்குநர்!

தொடர்புடைய இணைப்புகள்

Kamal haasan gifted lexus sedan car to lokesh Kanagaraj

People looking for online information on Kamal Haasan, Kamal haasan gifts car to Lokesh Kanagaraj, Lokesh Kanagaraj will find this news story useful.