'விக்ரம்' பார்த்துட்டு இயக்குனர் ஷங்கர் ட்வீட்.. லோகேஷ் & அனிருத் பற்றி வைரல் பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர், கமல் நடித்த 'விக்ரம்' படம் பற்றி ட்வீட் செய்துள்ளார்.

Director Shankar Review about Kamal Haasan Vikram Movie

Also Read | லோகேஷ்க்கு மட்டும் இல்ல… இந்த 13 பேருக்கும் பரிசு… அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த கமல்.!

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Director Shankar Review about Kamal Haasan Vikram Movie

விக்ரம் படத்தை பார்த்த பிரபலங்கள் படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் டிவிட்டரில், "#விக்ரம் வாவ்👏👏👏பார்க்க அருமை.. கமல் சார் பெரிய திரையில் 360° 💥💥💥 யில் நடித்துள்ளது உண்மையான லெஜண்ட்  போல் உள்ளது. இயக்குனர் லோகேஷ் 👏👏👏  சீரான இடைவெளியில் படத்தின் எங்கேஜ்மெண்ட் அதிகம், அனிருத் உண்மையான ராக்ஸ்டார்🤗❤️ அன்பறிவ் மாஸ்டர்கள்🔥💯 நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுக்கள் 🙌🙏" என ட்வீட் செய்துள்ளார்.

Director Shankar Review about Kamal Haasan Vikram Movie

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும். இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும், விக்ரம் படத்தில் பணியாற்றிய 13 உதவி இயக்குனர்களுக்கு TVS அப்பாச்சி RTR 160 ரக பைக்குகளை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார்.

Director Shankar Review about Kamal Haasan Vikram Movie

உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம்.

Director Shankar Review about Kamal Haasan Vikram Movie

Also Read | கமல் & லோகேஷுடன் விஜய் சேதுபதி… ‘விக்ரம்’ பார்த்துட்டு பிரபல நடிகர் Tweet ...Viral pic

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar Review about Kamal Haasan Vikram Movie

People looking for online information on Director shankar, Director Shankar Review about Vikram Movie, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vikram Movie will find this news story useful.