கார்த்தி & அதிதியின் Chartbuster ‘கஞ்சா பூவு கண்ணால’… விருமன் சிங்கிள் படைத்த சாதனை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி நடிப்பில் கொம்பன் முத்தையா இயக்கியுள்ள விருமன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Viruman single kanja poovu kannaala 8 million views

Also Read | ‘விக்ரம்’ Climax… பற்றி எரிந்த தியேட்டர் Screen… பதறிய ரசிகர்கள்.. என்ன நடந்தது.? Exclusive.

விருமன்…

நடிகர் கார்த்தி திரைவாழ்வில் கிராமத்து இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கும் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘பருத்திவீரன்’ , ‘கொம்பன்’ மற்றும் ‘கடைகுட்டி சிங்கம்’ போன்ற படங்கள் அமைந்தன.  இதையடுத்து கொம்பன் திரைபடத்துக்குப் பிறகு மீண்டும் கார்த்தி – முத்தையா கூட்டணி விருமன் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்துக்காக இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை அமைக்கின்றார்.

Viruman single kanja poovu kannaala 8 million views

பிரபல கலைஞர்கள்…

விருமன் திரைப்படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அதிதி ஷங்கர் (அறிமுகம்), கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் கூடுதல் அம்சமாக இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாகிறார். விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவரும் நிலையில் ரிலீஸ் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Viruman single kanja poovu kannaala 8 million views

கஞ்சா பூவு கண்ணால…

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூவு கண்ணால என்ற பாடலின் ப்ரோமோ இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றது. இதையடுத்து மே 25 ஆம் தேதி கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ’கஞ்சா பூவு கண்ணால’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடியிருந்த இந்த பாடல் வெளியானது முதல் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. பலரும் இந்த பாடலின் நாயகி அதிதி ஷங்கரின் நடன அசைவுகளை பிரதியெடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களாக வெளியிட வைரலானது. இதையடுத்து தற்போது இந்த பாடல் இணையத்தில் 8 மில்லியன் (80 இலட்சம்) பேரால் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்துள்ளது.

Viruman single kanja poovu kannaala 8 million views

Also Read | “அய்யோ இத எப்படி சமாளிக்குறது”… சிக்கிய கோபி… பாக்கியலட்சுமி தொடரில் பரபர Moment

தொடர்புடைய இணைப்புகள்

Viruman single kanja poovu kannaala 8 million views

People looking for online information on அதிதி, கஞ்சா பூவு கண்ணால, கார்த்தி, விருமன், Kanja poovu kannaala song, Karthi, Viruman Movie will find this news story useful.