லோகேஷ்க்கு மட்டும் இல்ல… இந்த 13 பேருக்கும் பரிசு… அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்த கமல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் அமோக வெற்றியால் படக்குழுவினருக்கு அடுத்தடுத்து பரிசுகளைக் கொடுத்து வருகிறார் கமல்ஹாசன்.

Kamal gifted 13 bikes to vikram assistant directors

விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

Kamal gifted 13 bikes to vikram assistant directors

வசூல் வேட்டை…

உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம் என சொல்லப்படுகிறது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது.

Kamal gifted 13 bikes to vikram assistant directors

கமல் சர்ப்ரைஸ்

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Kamal gifted 13 bikes to vikram assistant directors

உதவி இயக்குனர்களுக்கு பரிசு…

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தில் பணியாற்றிய சுமார் 13 உதவி இயக்குனர்களுக்கு TVS apache RTR 160 ரக பைக்குகளை கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்தடுத்து படக்குழுவினருக்கு பரிசுகளை கமல் அளித்துவருவது இணையத்தில் பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal gifted 13 bikes to vikram assistant directors

People looking for online information on KAMALHAASAN, Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.