கமல் & லோகேஷுடன் விஜய் சேதுபதி… ‘விக்ரம்’ பார்த்துட்டு பிரபல நடிகர் Tweet ...Viral pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சரத்குமார் விக்ரம் பார்த்துவிட்டு பகிர்ந்த டிவீட் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Sarathkumar tweet and pic after watching vikram went viral

விக்ரம் ரிலீஸ்…

ஜூன் 3 ஆம் தேதி கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம் என சொல்லப்படுகிறது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது.

Sarathkumar tweet and pic after watching vikram went viral

வரவேற்பு….

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சூர்யா ‘ரோல்கஸ்’ என்ற சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். கிரிஷ் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கதை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் விக்ரம் திரைப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. ரசிகர்கள் மட்டும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலரையும் கூட விக்ரம் திரைப்படம் பெரிய அளவில் கவர்ந்துள்ளது. சூர்யா, கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் படத்தைப் பாராட்டி டிவீட் செய்தது வைரலானது.

Sarathkumar tweet and pic after watching vikram went viral

சரத்குமார் பகிர்ந்த புகைப்படம்…

இந்நிலையில் நடிகர் சரத்குமார் விக்ரம் திரைப்படம் பார்த்த பின்னர் “ சிறப்பான படம். ஆரம்பம் முதல் இறுதிவரை ரசிகர்களைக் கவரும் விதமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். இயக்குனர் லோகேஷின் இயக்கமும் பரபரப்பான திரைக்கதையும் யூகிக்க முடியாதவையாக உள்ளது” எனக் கூறியுள்ளார். மேலும் இந்த டிவீட்டுடன் அவர், நடிகை ராதிகா, நடிகர்கள் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் லோகேஷ் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Sarathkumar tweet and pic after watching vikram went viral

தொடர்புடைய இணைப்புகள்

Sarathkumar tweet and pic after watching vikram went viral

People looking for online information on Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.