வாவ்… ரோலக்ஸ் கையில் ’Rolex’.. அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த கமல்… viral pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து கமல் படக்குழுவினருக்கு பரிசுகளை அளித்து வருவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kamal gifted a Rolex watch to suriya viral pic

Also Read | “அய்யோ இத எப்படி சமாளிக்குறது”… சிக்கிய கோபி… பாக்கியலட்சுமி தொடரில் பரபர Moment

விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

வசூல் வேட்டை…

உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்று வரும் நிலையில் அமெரிக்காவில் முதல் 3 நாட்களில் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசூல் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான அனைத்து தமிழ்ப் படங்களின் வசூலைவிடவும் அதிகம் என சொல்லப்படுகிறது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் படம் ரிலீஸாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றிருப்பது கமல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. கமலின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப் படங்களின் பட்டியலில் விக்ரம் கண்டிப்பாக இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது.

Kamal gifted a Rolex watch to suriya viral pic

கமல் சர்ப்ரைஸ்

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. மேலும் உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் அளித்துள்ளார்.

Kamal gifted a Rolex watch to suriya viral pic

சூர்யாவுக்கு ரோலக்ஸ்…

விக்ரம் படத்தின் இறுதியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி திரையரங்குகளை அதிரவிட்டார் சூர்யா. அவரின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் வரிசையாக படக்குழுவினருக்கு பரிசுகளை அளித்துவரும் நடிகரும் தயாரிப்பாளருமான கமல் சூர்யாவுக்கு விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை நடிகர் சூர்யா பகிர, இப்போது அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Kamal gifted a Rolex watch to suriya viral pic

Also Read | கார்த்தி & அதிதியின் Chartbuster ‘கஞ்சா பூவு கண்ணால’… விருமன் சிங்கிள் படைத்த சாதனை

தொடர்புடைய இணைப்புகள்

Kamal gifted a Rolex watch to suriya viral pic

People looking for online information on Kamal gifts a Rolex watch to suriya, Kamal Haasan, Lokesh Kanagaraj, Suriya, Vikram Movie, Vikram movie success will find this news story useful.