“First Half-ல கமல் சாருக்கு கம்மியான போர்ஷன்”… ஏன்? – ‘விக்ரம்’ இயக்குனர் லோகேஷ் Exclusive
முகப்பு > சினிமா செய்திகள்விக்ரம் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு முதல் முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள நேர்காணல் கவனம் பெற்றுள்ளது.
Also Read | கார்த்தி & அதிதியின் Chartbuster ‘கஞ்சா பூவு கண்ணால’… விருமன் சிங்கிள் படைத்த சாதனை
ரிலீஸும் வெற்றியும்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
வெற்றிக்கொண்டாட்டம்…
விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும். இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இயக்குனர் லோகேஷின் உதவியாளர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார்.
லோகேஷ் பிரத்யேக நேர்காணல்…
விக்ரம் படத்தின் வெற்றி மழையில் நனைந்திருக்கும் லோகேஷ் கனகராஜ் ரிலீஸுக்குப் பின் முதல் முறையாக நமது Behindwoods-க்கு அளித்துள்ள நேர்காணலில் படம் பற்றியும் நடிகர் கமல்ஹாசன் பற்றியும் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். நேர்காணலின் போது “ முதல் பாதியில் கமல் சாருக்கு கம்மியான போர்ஷன் இருப்பதாக கருத்துகள் எழுந்துள்ளது” பற்றி கேட்டபோது அதற்கு பதிலளித்துள்ளார்.
அதில் “சோதனைப் படங்களையே அதிகமாகப் பண்ணி பழகியவர் கமல் சார். அவர் எனக்குக் கிடைக்கும் போது நான் அவரை மட்டுமே காட்டிட முடியாது. அதுல கொஞ்சம் சோதனையும் இருக்கணும். அவர மட்டுமே கொண்டாடிடாமல் கதைக்கு கொஞ்சம் நியாயம் செய்ய வேண்டும்.. முதல்பாதில ஒரு டயலாக்தான் சாருக்கு ‘ஆரம்பிக்கலாமா’. அத நான் சொன்னதும்தான் அவருக்கே ஸ்ட்ரைக் ஆச்சு. இரண்டாம் பாதி முழுக்க அவர் மேலதான் இருக்கு. இது பெரிய ரகசியம்லாம் இல்ல. கமல் சார் வரப்போற இடத்த எல்லோரும் கொண்டாடனும்னு நெனச்சோம். இடைவேளைக்கு முன்பே ரசிகர்கள் கமல் சார் எண்ட்ரிய எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க” எனக் கூறியுள்ளார்.
Also Read | வாவ்… ரோலக்ஸ் கையில் ’Rolex’.. அடுத்த சர்ப்ரைஸ் கொடுத்த கமல்… viral pic
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Director Shankar's Review About Kamal Haasan And Lokesh Kanagaraj's Vikram
- Director Shankar Review About Kamal Haasan Vikram Movie
- Theatre Screen Fire In Pondichery Vikram Movie
- Sarathkumar Tweet And Pic After Watching Vikram Went Viral
- Kamal Gifted 13 Bikes To Vikram Assistant Directors
- Sivakarthikeyan Tweet About Vikram Movie Got Attention
- Sarathkumar Tweet And Pic After Watching Vikram Went Viral
- Kamal Gifted 13 Bikes To Vikram Assistant Directors
- Sivakarthikeyan Tweet About Vikram Movie Got Attention
- Kamal Haasan Gifts Lexus Sedan Car To Lokesh Kanagaraj Post Vikram's Success
- Lokesh Kanagaraj And Rathna Kumar's Special Rameshwaram Temple Visits For Kaithi And Vikram
- Kamal Haasan Gifted Lexus Sedan Car To Lokesh Kanagaraj
தொடர்புடைய இணைப்புகள்
- വിക്രം സിനിമ കളിക്കുന്നതിനിടെ സൂര്യ എത്തുന്ന രംഗമായപ്പോൾ തീയ്യേറ്ററിലെ സ്ക്രീനിന് തീ
- Screen-லயே வர மாதிரி., உண்மையான Kamal Fan Boy Moment-னா இப்படி இருக்கனும் 🔥 Robo Shankar Interview
- Andrea's SHOCKING Gesture To Jai Bhim Manikandan😲 #Shorts
- Kamal Haasan വർഷങ്ങൾക്ക് മുമ്പേ എഴുതി പൂർത്തിയാക്കിയ Superhero Movie 🤩🦸🏻♂️| Kalidas Reveals
- എന്നാലും ഇതൊരു വല്ലാത്ത പ്രാക്കായിപ്പോയി 😂😂😂 L Just Maried Things Season 2 L Episode 01
- Vijay Sethupathi-அ கட்டி பிடிச்சேன், அவரு சொன்னாரு நானே கட்டிப்பிடிங்கனு சொல்லணும்னு நினச்சேன்🤣 Myna
- "கடன் பிரச்...
- "Life Time Settlement " ஆண்டவர் கொடுத்த செம Gift..! Lokesh வாழ்வில் மறக்க முடியாத Moment
- " கமல் சினிம...
- VIKRAM വൻ ഹിറ്റായി. സന്തോഷത്തിൽ ലോകേഷിന് LEXUS കാർ സമ്മാനമായി നൽകി കമൽഹാസ്സൻ.
- വസന്തിയിൽ നിന്നും Agent Tina ലേക്കുള്ള മാറ്റം...?|Actress Vasanthi Opens Up
- Lokesh Kanagaraj-ஐ Emotional ஆக்கிய Kamal Haasan 🥲 Vikram Success