அப்போ, இன்னைக்கு விஜய்யின் மாஸ்டர் அப்டேட் இருக்கு... மாஸ்டர் டீம் சொல்லும் ப்ராமீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது.

vijay's master next update for this valantines week ft lokesh

நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணிபுரிந்த இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'இந்த வேலன்டைன்ஸ் வாரத்தில், இது ப்ராமிஸ் டே. அதனால் மாஸ்டர் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ஒரு தேதி, நேரம் சொல்லி சத்தியம் செய்யவும்' என இயக்குநர் லோகேஷ் கனகராஜை டேக் செய்துள்ளார். இதனால் இன்று மாஸ்டர் படத்தை பற்றி ஏதாவது அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Entertainment sub editor