அருண் விஜய், பிரியா பவானி ஷங்கருக்கு சொன்ன பிளான் - ரிசல்ட் ? - 'மாஃபியா' ஸ்நீக் பீக் வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துருவங்கள் பதினாறு' பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் - பிரசன்னா இணைந்து நடித்திருக்கும் 'மாஃபியா' படம் பிப்ரவரி 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. லைக்கா புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Arun Vijay, Priya Bhavani Shankar, Prasanna's Mafia sneak peek Video is out

இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து தற்போது ஸ்நீக் பீக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அருண் விஜய், பிரியா பவானி ஷங்கருக்கு பிளான் ஒன்றை விவரிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த படத்தின் டீஸர் மற்றும் வேடன் வந்தோச்சோ பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஸ்நீக் பீக் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த படத்துக்கு சென்சாரில் U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. கோகுல் பினோய் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜோய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் இந்த படத்துக்கு எடிட்டிங் மற்றும் DI பணிகளை மேற்கொண்டுள்ளார்.

Entertainment sub editor