இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட ஃபோட்டோ - 'தங்கச்சி பிறந்ததுக்கு அக்காவோட ரியாக்சன பாருங்க'
முகப்பு > சினிமா செய்திகள்'மேயாதமான்', 'ஆடை' படங்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரத்ன குமார். குறிப்பாக இவரது 'ஆடை' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாக்களில் ஒருவராக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே குரலினியாள் என்ற ஒரு குழந்தையுள்ள நிலையில் அவருக்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவர் தனது முதல் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ''அக்கா ஆனதுக்கு பிறகு குரலின் பெருமையான லுக். பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தளபதி நடித்துள்ள 'மாஸ்டர்' படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.