விஜய் டிவி Rakshan அதிரடி - 'ஜாக்குலின என்ன வெச்சு கலாய்ப்பாங்க..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'ஓகே கண்மணி', 'சோலோ' படங்களுக்கு பிறகு துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த படம் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார். இந்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார்.

Vijay TV Rakshan, Speaks about Dulquer Salmaan , Jacqueline Kannum Kannum Kollaiyadithaal

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு தொடரை தொகுத்து வழங்கிய ரக்சன் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து அவருடன் நடித்த நிரஞ்சனாவுடன் இணைந்து Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது ஓரின ஈர்ப்பாளர்களிடம் நேர்ந்த அனுபவம் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர், ''ஷாட்ஸ்லாம் போட்டு ஜாலியா போய்ட்டு போகும் போது என்னை பாரத்து ஒருத்தர் சிரிச்சாரு. அப்புறம் அவர் என்னையே ஃபாலோ பண்ணிட்டு வந்தாரு. எனக்கு ரொம்ப பயமா இருந்தது. ஒரு பொண்ணு பையன பார்த்து எந்த அளவுக்கு பயப்பட முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு பயமா இருந்தது. நான் அந்த மாதிரி இல்ல..

ஜாக்குலின் கிட்ட பிடிச்சது. எல்லா விஷயங்களையும் ஈஸியா எடுத்துப்பாங்க. அவங்க குரல வச்சு நிறைய கலாய்ப்பாங்க.. என்ன வச்சுமே கலாய்ப்பாங்க. இந்த ரெண்டு விஷயத்தையுமே அவங்க ஸ்போர்ட்டிவா எடுத்துப்பாங்க. அது ஜாக்குலின் கிட்ட எனக்கு பிடிச்ச விஷயம்'' என்றார்.

விஜய் டிவி RAKSHAN அதிரடி - 'ஜாக்குலின என்ன வெச்சு கலாய்ப்பாங்க..'' வீடியோ

Entertainment sub editor