'இந்தியன் 2' விபத்து குறித்து நடிகை - ''பிகில்' ஷூட்டிங்கிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சு''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. நேற்றிரவு (பிப்ரவரி 19) சுமார் 9:30 மணியளவில் 150 அடி மதிக்கத்தக்க கிரேன் விழுந்து பெரும் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

நடிகை அம்ரிதா, இந்தியன் 2 விபத்து மாதிரி பிகில் பட ஷூட்டிங்கிலும் நடந்ததாக தெரிவித்தார் | Vijay's Bi

மேலும்  இந்த விபத்தில் 3 பேர் இறந்ததாகவும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்துக்கு குறித்து லைக்கா புரொடக்சன் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்கல் இரங்கல் செய்திகளை தெரிவித்தனர்.

இந்த விபத்துகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், ''எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன். எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில்  பங்கேற்கிறேன்.அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து 'பிகில்' படத்தில் நடித்திருந்த அம்ரிதா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ''இது மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த இடம் மிகவும் பயமுறுத்தக்கூடியதாக இருக்கிறது. இதே மாதிரி ஒரு சம்பவம் 'பிகில்' படத்தின் போது இதே போன்ற லைட் ஒன்று ஒருவர் மீது விழுந்தது'' என்றார்.

Entertainment sub editor