#Breaking : விஜய்யின் மாஸ்டர் ஷூட்டிங் - லோகேஷ் கனகராஜ் போட்ட பக்கா ஸ்கெட்ச் .!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கியமான தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.

vijay vijay sethupathi master shooting details is here

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, ஷாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் ஷூட்டிங் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கை இந்த மாதத்தில் முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. பிப்ரவரி 28 அன்று படத்தின் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு ப்ளான் பண்ணியிருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து மாஸ்டர் படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor