மாஸ்டர் நடிகரின் சுயநலம்.. காரணம் யார் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vijay's master actor shanthnu shares his wish to his wife kiki

நடிகர் பாக்யாராஜின் மகனான ஷாந்தனு தமிழ் சினிமாவில் சக்கரக்கட்டி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து சித்து ப்ளஸ் டூ, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமானம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'உன்னால் தான் நான் எப்போதும் நான் வலிமையாக இருக்கிறேன். உனக்கு கடவுள் மகிழ்ச்சியான வாழ்க்கையை தருவார் என நம்புகிறேன். ஆம், நான் மிகவும் சுயநலமாக தான் இருக்கிறேன். நீ எனக்கு மட்டுமே வேண்டும் என விரும்புகிறேன்' என அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor