’பாகுபலி’ புகழ் ராணா டகுபதியின் ’காடன்’ திரைப்படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இப்படத்தில் இவருடன் விஷ்ணு விஷால், சோயா ஹுசைன், ஷ்ரேயா பில்கோன்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

மும்மொழிகளில் தாயாராகும் இந்த படத்தை ‘கும்கி’, ‘கயல்’ ஆகிய படங்களை எடுத்த பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் விஷ்ணு விஷாலுக்கென்று ஒரு தனி போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இதில் அவர் மாறன் என்ற பெயர் கொண்ட யானைப்பாகனாக நடிக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் மூலம் விஷ்ணு விஷால் முதல் தடவையாக தெலுங்கு சினிமாவில் கால் பதிக்கிறார். தமிழ் சினிமாவில் மாறன் என்ற பெயர் மெதுவாக ட்ரெண்டாகி வருகிறது. மெர்சல் படத்தில் விஜய் ஏற்றிருந்த ஒரு ரோலின் பெயர் மாறன். சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தில் அவரது பெயரும் நெடுமாறன்.
Get ready to witness the biggest battle of man versus wild! Watch #VishnuVishal in #Kaadan (Tamil), releasing on April 2, 2020. Stay tuned for more updates. #ErosNow #SaveTheForest🐘 @TheVishnuVishal @RanaDaggubati #PrabuSolomon @zyhssn @ShriyaP @ErosIntlPlc pic.twitter.com/atnrz3hnLF
— Eros Now (@ErosNow) February 10, 2020