தளபதி விஜய்யின் ‘பிகில்’ பட ரொமாண்டிக் போஸ்டர் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 08, 2019 06:12 PM
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
![Vijay's Bigil Wedding poster of Nayanthara and Vijay is out Vijay's Bigil Wedding poster of Nayanthara and Vijay is out](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijays-bigil-wedding-poster-of-nayanthara-and-vijay-is-out-news-1.jpg)
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் வரும் அக்.12ம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு போஸ்டரில், அப்பா வேடமான ராயப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய்யின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
நடிகர் மிரட்டலான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்த நிலையில், தற்போது பிகில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் நடிகை நயன்தாரா மற்றும் விஜய் இணைந்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு போட்றா வெடிய என வெறித்தனம் கூட்டும் விதமாக வெளியாகவிருக்கும் ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Bigil @Ags_production @actorvijay #Nayanthara @arrahman @archanakalpathi @Actor_Vivek @am_kathir @iYogiBabu @dop_gkvishnu @AntonyLRuben @muthurajthangvl @Lyricist_Vivek @SonyMusicSouth pic.twitter.com/4dqlmOCDDL
— atlee (@Atlee_dir) October 8, 2019