''விஜய்யின் 'பிகில்' சூர்யாவின் 'சூரரைப் போற்று' படத்துல நடிக்கிறீங்களாமே கலக்குங்க''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வேல்ஸ் புரொடக்ஷன் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்து வெளியாகியுள்ள படம் 'கோமாளி'. பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

Comali Director Pradeep wishes RJ Ananthi for Bigil and Soorarai Pottru

இந்த படத்தில், காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த படம் சமீபத்தில் 50 நாட்களை கடந்தது. அதனை ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இதனை பகிர்ந்த நடிகை ஆர்.ஜே.ஆனந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தார். அதில், ''பிகிலில் என்னை கண்டுபிடியுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், நீங்க பிகில் மற்றும் சூரரைப்போற்று படத்தில் நடிப்பதாக கேள்விப்பட்டேன் கலக்குங்க'' என்றார்.