''விஜய் பன்றது பிடிக்காம போகலாம், ஆனா....'' - தளபதியின் 'பிகில்' படம் குறித்து பிரபல நடிகர் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 07, 2019 04:57 PM
'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு தளபதி விஜய் - அட்லி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் பிகில். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு, டிஎம். கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து டி.எம்.கார்த்திக் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அதில், ''ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், அமைதியா அவரோட வேடத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார் . அவர் வேற zoneக்கு போய்ட்டாருனு சொல்லலாம். என்ன பண்ணனும்னு கிளியரா அவருக்கு இருக்கு. விஜய் சார் பன்றது பிடிக்காம போகலாம். அது ஃபேன்ஸ்க்குள்ள இருக்க ஒப்பிடுனால அப்படி நடக்கலாம்.
ஆனால் அவர் பன்றது என்னை பாதிக்கவில்லை, என்னை டச் பண்ணலனு யாராலும் சொல்ல முடியாது. அது வரைக்கும் அமைதியா இருந்தவரு. சீன் ஆரம்பிச்சதும் வேற லெவல் பண்ணுவாரு. என்ன இந்த மனுஷன் இப்படி பண்ணிட்டாருனு தோணும்'' என்றார்.
''விஜய் பன்றது பிடிக்காம போகலாம், ஆனா....'' - தளபதியின் 'பிகில்' படம் குறித்து பிரபல நடிகர் கருத்து வீடியோ