விஜய் ஆண்டனிக்கு பாடல் வரிகள் எழுதும் Legendary பாடலாசிரியர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 08, 2019 11:50 AM
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர் ஒப்பந்தமாகியுள்ளார்.
![Legendary Lyricist Vairamuthu roped in for Vijay Milton-Vijay Antony film Legendary Lyricist Vairamuthu roped in for Vijay Milton-Vijay Antony film](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/legendary-lyricist-vairamuthu-roped-in-for-vijay-milton-vijay-antony-film-news-1.jpg)
‘கொலைகாரன்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் தெலுங்கு ஹீரோ அல்லு சிரிஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கடந்த 1995ம் ஆண்டு வெளியான ‘மாயாபஜார்’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமான நடிகர் அல்லு சிரிஷ் தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெறும் பாடலை எழுத பிரபல பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்ஃபினிட்டி ஃபில்ம்ஸ் வென்சர்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
இது தவிர நடிகர் விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.