போட்றா வெடிய...!! டிரைலருக்கு நாள் குறித்த ‘பிகில்’ டீம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்து வரும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிவரும் இந்த படத்தை அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Nayanthara Bigil Trailer From October 12th

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் வெறித்தனம் பாடலின் புரோமோ வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் பிகில் படத்தின் டிரைலர் அக்டோபர் 12ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.