தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் இருந்து வெளியான BGM Work வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Atlee posted Video about Vijay, Nayanthara, AR Rahman's Bigil

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், இந்துஜா, ஆனந்தராஜ், விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகில் படத்தின் பின்னணி இசை அமைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பிகில், விசில் படத்தின் பின்னணி இசையமைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது என ஏ.ஆர்.ரஹ்மானை குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Bigil #whistle BGM work #Macedonia string session on......... @arrahman sir ❤️❤️❤️🎼🎼🎼

A post shared by Atlee (@atlee47) on