பிக் பாஸ் முடிந்த பின் Real குருநாதருடன் ஓர் சந்திப்பு!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 08, 2019 05:33 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இரண்டாவது வெற்றியாளரான டான்ஸ் மாஸ்டர் சாண்டி தனது நடன குருவான கலா மாஸ்டரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸிடம் கலாட்டா செய்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்திருந்தவர் சாண்டி. இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும், அவர் நடந்துக் கொண்ட விதம் மக்கள் மனதில் சாண்டிக்கான இடத்தை உறுதி செய்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் முகென் வெற்றியாளராகவும், சாண்டி இரண்டாவது வெற்றியாளராகவும் அறிவிக்கப்பட்டனர். இதனையடுத்து, சாண்டி தனது நடன குருவான கலா மாஸ்டரை அவரது டான்ஸ் ஸ்டூடியோவில் சந்தித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதனிடையே, நடிகர் சிம்பு, பிக் பாஸ் போட்டியாளர்களான சாண்டி மற்றும் தர்ஷனை சந்தித்து வாழ்த்துக் கூறிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.