www.garudabazaar.com
iTechUS

Varisu : மெகா பிளாக் பஸ்டர்..!! ‘வாரிசு’ உலகளாவிய கலெக்‌ஷன் ரிப்போர்ட்..! வெளியான அறிவிப்பு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில், கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், ஜனவரி மாதம் 11 ஆம் தேதியன்று உலகம் முழுவதிலுமுள்ள திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

Vijay Varisu crossed 300Crs worldwide gross collection

Images are subject to © copyright to their respective owners.

Also Read | மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டாவின் ‘கீத கோவிந்தம்’ பட கூட்டணி.. வெளியான அப்டேட்..!

வாரிசு திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி இருந்தார். இதில், நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம், யோகிபாபு, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரித்திருந்தனர்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி இருந்தனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்திருந்தனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி இருந்தார்.

வாரிசு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்ததையடுத்து சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் இந்த படம் வசூல் செய்திருந்ததாகவும் படக்குழுவினர் தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்படம் மெகா பிளாக் பஸ்டர் படமாகவும் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Also Read | ஃபீல் குட் காமெடி ஜானரில் யோகிபாபு நடிக்கும் புதிய படம்.. செம்ம டைட்டில்.. ஒன்லைன் இதுதான்.!

Tags : Vijay, Varisu

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu crossed 300Crs worldwide gross collection

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.