மீண்டும் இணையும் விஜய் தேவரகொண்டாவின் ‘கீத கோவிந்தம்’ பட கூட்டணி.. வெளியான அப்டேட்..!
முகப்பு > சினிமா செய்திகள்எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பரசுராம், தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா இணைகிறார்.
![Vijay Deverakonda Joins Parasuram, Dil Raju and Shirish SVC Creations Vijay Deverakonda Joins Parasuram, Dil Raju and Shirish SVC Creations](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-deverakonda-joins-parasuram-dil-raju-and-shirish-svc-creations-photos-pictures-stills.jpeg)
Images are subject to © copyright to their respective owners.
Also Read | காஷ்மீர் Case?.. 'விக்ரம்' அமருக்கும்.. LEO படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பா? அப்போ LCU தானா?.
தெலுங்கில் 'கீத கோவிந்தம்' படத்தை ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த தயாரிப்பாளர் பரசுராமுடன் நடிகர் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒருமுறை இணைகிறார். இது குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கில் உருவானாலும் ஏறக்குறைய பிறமொழி மக்களாலும் பார்க்கப்பட்டு ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிளாக் பஸ்டர் படமான 'கீத கோவிந்தம்' படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் மற்றும் பரசுராம் இரண்டாவது முறையாக இணைகின்றனர். இந்த புராஜெக்ட் புதிய மற்றும் தனித்துவமான கதையாக இருக்கும் என படக்குழுவினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
ஸ்டார் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இந்த புதிய படத்தைத் தயாரிக்க உள்ளனர். விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் இந்த படம் எஸ்விசி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்ச்செலவில் தயாரிக்கப்பட இருக்கிறது. நடிகர்கள், படக்குழுவினர் விவரங்கள் மற்றும் படம் குறித்தான அடுத்தடுத்த புரோமோஷனல் விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கி வெளியான வாரிசு திரைப்படத்தையும் எஸ்விசி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இணைந்த தனுஷ், சிம்பு பட ஹீரோயின்.!