www.garudabazaar.com
iTechUS

தைப்பூசத்தில் முருகனுக்காக மனமுருகி பாடிய சித் ஸ்ரீராம்..! பார்த்திபன் நெகிழ்ச்சி கமெண்ட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடவுள் முருகனுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, வைசாகி விசாகம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒன்றாகும். அதில், தை மாதத்தில் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தான் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படும்.

Parthiban about Sid Sriram song for Thaipusam video viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | Michael : “மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு அடுத்தமுறை உழைப்பேன்” .. மைக்கேல் பட இயக்குநர் ட்வீட்.

சமீபத்தில் தைப்பூச தினத்தை முன்னிட்டு பல இடங்களில் உள்ள முருகன் கோவிலில் திருவிழாக்கள் நடைபெற்றது. இதற்காக, ஏராளமான இடங்களில் இருந்து பக்தர்கள் பலரும் முருகன் கோவிலுக்கும் சென்று தரிசனமும் செய்து வருகின்றனர். மேலும் இதன் காரணமாக, முருகன் கோவில் பலவும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியவும் செய்கிறது.

இந்த நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

Parthiban about Sid Sriram song for Thaipusam video viral

Images are subject to © copyright to their respective owners.

என்னோடு நீ இருந்தால், தள்ளி போகாதே, மறுவார்த்தை உள்ளிட்ட எக்கச்சக்க பாடல்கள் பாடி மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் கர்னாடிக் பாடகர் சித் ஸ்ரீராம். ஏ. ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, அனிருத் உள்ளிட்ட ஏராளமான இசை அமைப்பாளர்களுடனும் பணிபுரிந்துள்ள சித் ஸ்ரீராமின் பிரத்யேக குரலுக்கு நிறைய ரசிகர்களும் உள்ளனர். பாடல்கள் பாடி உள்ள சித் ஸ்ரீராம், "வானம் கொட்டட்டும்" என்ற திரைப்படத்திற்கு இசையமைக்கவும் செய்திருந்தார்.

இதனிடையே, அவ்வப்போது சில பாடல்கள் பாடி வீடியோக்களையும் சித் ஸ்ரீராம் வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி இருக்கையில், தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் குறித்த பாடல் ஒன்றை பாடி வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நெட்டிசன்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் இந்த வீடியோவை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் கவனித்துள்ளார்.

Parthiban about Sid Sriram song for Thaipusam video viral

Images are subject to © copyright to their respective owners.

அத்துடன் சித் ஸ்ரீராம் பாடல் வீடியோவின் கீழ், "அருள் அருவியாய் கொட்டியிருக்கிறது உங்கள் ஆன்மாவில் …. ரசிக்கிறேன் நட்பனாய்!!!" என மனம் நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார். பதிலுக்கு சித் ஸ்ரீராமும் பார்த்திபன் கமெண்டிற்கு கீழ் நன்றி தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.

Also Read | காஷ்மீர் Case?.. 'விக்ரம்' அமருக்கும்.. LEO படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பா? அப்போ LCU தானா?.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban about Sid Sriram song for Thaipusam video viral

People looking for online information on Radhakrishnan Parthiban, Sid Sriram, Thaipusam video will find this news story useful.