www.garudabazaar.com
iTechUS

தளபதி விஜய் நடிக்கும் "LEO".. முக்கிய பண்டிகை தினத்தை முன்னிட்டு ரிலீஸ்! செம்ம தேதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Lokesh Kanagaraj Leo Movie Release Date Announced

Images are subject to © copyright to their respective owners.

Also Read | தமிழுக்கு வராங்களா ஶ்ரீ தேவி மகள் ஜான்வி ?.. தந்தை போனிகபூர் விளக்கம்!

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  சில நாட்களுக்கு முன் வெளியானது.

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் லியோ  படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. காஷ்மீரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Vijay Lokesh Kanagaraj Leo Movie Release Date Announced

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

Vijay Lokesh Kanagaraj Leo Movie Release Date Announced

Images are subject to © copyright to their respective owners.

சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

Vijay Lokesh Kanagaraj Leo Movie Release Date Announced

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை சன் டிவியும், ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றி உள்ளது.

Vijay Lokesh Kanagaraj Leo Movie Release Date Announced

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரையரங்குகளில் லியோ படம் வெளியாக உள்ளது. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இம்முறை அக்டோபர் 23 & 24 தேதிகளில் திங்கள் & செவ்வாய் கிழமைகளில்  பூஜை விடுமுறை வருகிறது.

Also Read | சாக்லேட் செய்யும் விஜய்.. Thalapathy 67 அட்டகாசமான டைட்டில் ப்ரோமோ ! LEO - Bloody Sweet

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Lokesh Kanagaraj Leo Movie Release Date Announced

People looking for online information on Leo, Leo Movie, Leo Movie Release update, Lokesh Kanagaraj, Thalapathy 67 LEO movie, Vijay will find this news story useful.