www.garudabazaar.com
iTechUS

அழகிய தமிழ்மகன் படத்துக்கும்... Thalapathy 67 போஸ்டருக்கும் இருக்குற சூப்பர் கனெக்ஷன்.. Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 படம் உருவாகி வரும் நிலையில், இந்த படத்தின் டைட்டில் நாளை (03.02.2023) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Azhagiya Tamizhmagan vijay look thalapathy 67 new poster

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிக்பாஸ்ல இப்படி நடந்தது எங்களுக்கு வேதனையா இருந்தது.. முதல்முறை உடைத்த விக்ரமன் தந்தை..!

முன்னதாக, தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகி இருந்தது. அதன்படி, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதே போல, நடிகை த்ரிஷாவும் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு, விஜய்யுடன் தளபதி 67 படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

Azhagiya Tamizhmagan vijay look thalapathy 67 new poster

Images are subject to © copyright to their respective owners.

S. லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இசை அமைப்பாளர் அனிருத், தளபதி 67 படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

Azhagiya Tamizhmagan vijay look thalapathy 67 new poster

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே, தளபதி 67 படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸூம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகின. இதே போல, தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியாவது பற்றியும் அறிவிப்பு வெளியானது.

Azhagiya Tamizhmagan vijay look thalapathy 67 new poster

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இதற்கான போஸ்டரில் நடிகர் விஜய் ரத்தக்கரை கொண்டு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. சற்று ஆக்ரோஷமாக இருக்கும் விஜய், இரண்டு கைகளையும் உயர்த்தியபடி இருக்கிறார். அப்படி இருக்கையில், இதே போன்று ஒரு லுக், விஜய் நடித்திருந்த "அழகிய தமிழ்மகன்" படத்தில் வருவது போன்றும் உள்ளது.

Azhagiya Tamizhmagan vijay look thalapathy 67 new poster

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில், தளபதி 67 படத்தின் புதிய போஸ்டர் மற்றும் அழகிய தமிழ்மகன் படத்தில் வரும் விஜய் என இரண்டையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "கைதி, தளபதி 67".. ரெண்டு படம் நடுவுல இப்டி ஒண்ணு இருக்கா?.. Trend செய்யும் ரசிகர்கள்!!

தொடர்புடைய இணைப்புகள்

Azhagiya Tamizhmagan vijay look thalapathy 67 new poster

People looking for online information on Azhagiya Tamizhmagan, Azhagiya Tamizhmagan vijay, Thalapathy 67, Vijay will find this news story useful.