www.garudabazaar.com
iTechUS

சாக்லேட் செய்யும் விஜய்.. Thalapathy 67 அட்டகாசமான டைட்டில் ப்ரோமோ ! LEO - Bloody Sweet

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தின் ப்ரோமோ வீடியோவுடன் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Lokesh Kanagaraj Vijay Thalapathy 67 Movie Titled as LEO

Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்.. வெளிநாட்டிற்கு செல்லும் ஷங்கர் & கமல்ஹாசன்? BREAKING அப்டேட்

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Lokesh Kanagaraj Vijay Thalapathy 67 Movie Titled as LEO

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

Lokesh Kanagaraj Vijay Thalapathy 67 Movie Titled as LEO

Images are subject to © copyright to their respective owners.

S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க உள்ளது.

Lokesh Kanagaraj Vijay Thalapathy 67 Movie Titled as LEO

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு புதிய ப்ரோமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது. பேக்கரியில் சாக்லேட் செய்யும் நடிகர் விஜய்,  ஆக்ரோஷமான லுக்கில் அதே பேக்கரியில் இரும்பு அடித்து வாள் செய்வது போல் ப்ரோமோ வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது.

Also Read | "இளைப்பாறுங்கள் அப்பா".. பரியேறும் பெருமாள் தங்கராஜ் மறைவுக்கு மாரி செல்வராஜ் இரங்கல்..

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh Kanagaraj Vijay Thalapathy 67 Movie Titled as LEO

People looking for online information on Leo, Lokesh Kanagaraj, Thalapathy 67, Thalapathy 67 Movie Title, Vijay will find this news story useful.