www.garudabazaar.com
iTechUS

ரியலாவே ரிகிரியேட் ஆன ரீல் Scene.. Leo -க்காக விமானத்தில் பறந்த விஜய், த்ரிஷா.. Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 67 படம் உருவாகி வரும் நிலையில், காஷ்மீருக்கு படக்குழு சென்றது தொடர்பான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது.

Thalapathy 67 Vijay and Trisha same look recreation viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அசிம் ஒண்ணும் TOUGH COMPETITOR இல்ல, விக்ரமன் தான்".. ஷிவின் நாமினேட் செஞ்சதுக்கு பின்னாடி இப்டி ஒரு விஷயம் இருக்கா?

முன்னதாக, தளபதி 67 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் அடுத்தடுத்து வெளியாகி இருந்தது. அதன்படி, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், அர்ஜுன், மன்சூர் அலிகான், கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சாண்டி உள்ளிட்டோர் தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதே போல, நடிகை த்ரிஷாவும் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு, விஜய்யுடன் தளபதி 67 படத்தில் இணைந்து நடிக்க உள்ளார்.

Thalapathy 67 Vijay and Trisha same look recreation viral

Images are subject to © copyright to their respective owners.

S. லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இசை அமைப்பாளர் அனிருத், தளபதி 67 படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர்.

Thalapathy 67 Vijay and Trisha same look recreation viral

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, தளபதி 67 படத்தின் பூஜை நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இருந்தது. இதில் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், தளபதி 67 படக்குழு, காஷ்மீர் படப்பிடிப்பிற்காக செல்லும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில், நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர்கள் அனைவரும் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. இதில், விஜய்யும் நடுவே வீடியோ எடுக்கவும் செய்கிறார். இந்த வீடியோ வைரலாகி இருந்த சூழலில், தற்போது அதில் உள்ள க்யூட்டான விஷயம்  ஒன்றும் அதிக கவனம் பெற்று வருகிறது.

Thalapathy 67 Vijay and Trisha same look recreation viral

Images are subject to © copyright to their respective owners.

விஜய் மற்றும் திரிஷா ஆகியோர் அருகருகே விமானத்தில் அமர்ந்திருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்திருந்த குருவி படத்தில் அருகருகே அமர்ந்தபடி விமானத்தில் பயணம் செய்யும் காட்சி வரும். இந்த இரண்டு காட்சிகளும் சேர்த்து அவர்கள் அருகே இருக்கும் புகைப்படங்கள் குறித்த பதிவு, பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் தளபதி 67 படத்திற்கு முன்பு, 14 ஆண்டுகள் முன்பாக குருவி படத்தில் இணைந்து நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | "என்கிட்ட இல்லன்னு சொல்லிட்டு, கமல் சார்கிட்ட ஆமான்னு சொன்னதும்".. அசிம் பேச்சால் அதிர்ந்த Shivin

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 67 Vijay and Trisha same look recreation viral

People looking for online information on Thalapathy 67, Trisha Krishnan, Vijay, Vijay and Trisha Recreation will find this news story useful.