www.garudabazaar.com
iTechUS

சந்தானம் நடிக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இணைந்த தனுஷ், சிம்பு பட ஹீரோயின்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்குத் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, பிளாக்பஸ்டர் படமான ‘கூடச்சாரி’ திரைப்படம் தொடங்கி வணிக ரீதியாக வெற்றிகரமான பல படங்களைக் கொடுத்துள்ளது.

Megha Akash On Board Santhanam Vadakupatti Ramasamy

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO : மைனஸ் 5 டிகிரியிலயா.. விஜய் நடிக்கும் லியோ பட ஷூட்டிங்.. காஷ்மீர்ல எங்க? செம அப்டேட்..!

'விட்னெஸ்' மற்றும் 'சாலா' போன்ற படங்களைத் தயாரித்து தமிழ்த் திரையுலகிலும் அடியெடுத்து வைத்தது. இப்போது அதன் மூன்றாவது தயாரிப்பில்  (புரொடக்சன் நம்பர் 3) உருவாகும் படத்தில் 'டிக்கிலோனா' பட ப்ளாக்பஸ்டர் வெற்றி கூட்டணியான நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் கார்த்திக் யோகி  இணைந்துள்ளனர். இந்தப் படத்திற்கு 'வடக்குப்பட்டி ராமசாமி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

சந்தானம் படத்தின் கதாநாயகனாக நடிக்க கதாநாயகி யார் என்பதை இறுதி செய்யும் பணியில் படக்குழு இருக்கிறது. ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, 'விட்னெஸ்' படப்புகழ் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். 'தீரன் அதிகாரம் ஒன்று', 'டெடி' படப்புகழ் சிவ நந்தீஸ்வரன்படத்தொகுப்பை கவனித்துக்கொள்கிறார். கலை இயக்குநராக, 'கோமாளி' படப்புகழ் ராஜேஷ், நடன இயக்குநராக ஷெரிஃப் மாஸ்டர் பணிபுரிகின்றனர்.

Megha Akash On Board Santhanam Vadakupatti Ramasamy

Images are subject to © copyright to their respective owners.

'வடக்குப்பட்டி ராமசாமி' ஒரு பீரியட் காமெடி-ட்ராமா படமாக அமைந்து அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடித்த ஒன்றாக அமையும் என ஏற்கனவே இப்படத்தின் தயாரிப்பாளர் கூறி இருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்கப்படுகிறது. கோடை மத்தியில் உலகம் முழுவதும் இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக நடிகை மேகா ஆகாஷ் இணைந்துள்ள அதிகாரப்பூர்வ தகவல், படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகை மேகா ஆகாஷ், தமிழில் பேட்ட, என்னை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | காஷ்மீர் Case?.. 'விக்ரம்' அமருக்கும்.. LEO படத்துக்கும் இப்படி ஒரு தொடர்பா? அப்போ LCU தானா?.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Megha Akash On Board Santhanam Vadakupatti Ramasamy

People looking for online information on Megha Akash, Santhanam, Vadakupatti ramasamy will find this news story useful.