www.garudabazaar.com

பிரபல டிவி சேனலில் ஒளிபரப்பாகும் வாரிசு இசை வெளியீட்டு விழா.. எப்போ? வைரல் ப்ரோமோ வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Vijay Varisu Audio Launch on Sun TV New Year Special

Also Read | மொத்த குடும்பமும் இங்கே தான் இருக்காங்க.. ரன்பீர் - ஆலியா பட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 😍

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார். நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Varisu Audio Launch on Sun TV New Year Special

இந்த படத்தின் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் முத்துக்கனி கைப்பற்றி உள்ளார். மேலும், இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான ராது இன்ஃபோடெயின்மெண்ட் வி.எஸ். பாலமுரளி  கைப்பற்றி உள்ளார். சேலம்  ஏரியாவை வினியோகஸ்தர் செந்தில் கைப்பற்றியுள்ளார். மதுரை உரிமத்தை Five Star Flims நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் சென்னை சிட்டி, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், வட & தென் ஆற்காடு ஆகிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Vijay Varisu Audio Launch on Sun TV New Year Special

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் அனைத்து 5 பாடல்களும் வெளியாகியுள்ளன.

Vijay Varisu Audio Launch on Sun TV New Year Special

மேலும் புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் டிரெய்லர் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை பிரபல சன் டிவி சேனல் ஒளிபரப்ப உள்ளது. வரும் 2023 புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.

 

Also Read | காதலரின் பிறந்தநாள்😍.. ஃபோட்டோ வெளியிட்டு நெகிழ்ந்த ரகுல் ப்ரீத் சிங்..

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Audio Launch on Sun TV New Year Special

People looking for online information on New Year Special, Sun TV, Varisu, Varisu Audio launch, Varisu Audio Launch Telecast, Vijay will find this news story useful.