www.garudabazaar.com

"அசிம் அண்ணா, நீங்க கண் கலங்குனத பாத்தேன்".. வெளியேறிய பின் தனா சொன்ன வார்த்தை!!.. bigg boss tamil 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி வெளியேறிய நிலையில் பத்து போட்டியாளர்கள் மட்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் விளையாடி வந்தனர்.

Dhanalakshmi and azeem convo bigg boss tamil season 6

Also Read | திருமணத்துக்கு பிறகு மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா.. வெளியான ப்ரோமோ

இதற்கு மத்தியில் பிக்பாஸ் வீடு கடந்த வாரம் ஆரம்ப பள்ளியாகவும், பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும், அதன் பின்னர் கல்லூரி ஆகவும் மாறி இருந்தது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்திருந்த விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருந்தது. பொதுவாக ஒரு டாஸ்க் என வந்து விட்டால் பிக்பாஸில் ஏராளமான சண்டைகள் நடைபெறுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

Dhanalakshmi and azeem convo bigg boss tamil season 6

ஆனால் கடந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களும் வலம் வந்ததுடன் மட்டும் இல்லாமல், மிகவும் கலகலப்பாகவும் தங்களின் பணிகளை செய்தனர். இதனால் டாஸ்க் மிகவும் உற்சாகமாக தான் சென்று கொண்டிருந்தது. அதே வேளையில் டாஸ்க் முடிந்த பின்னர் ரேங்கிங் டாஸ்க் வந்த சமயத்தில், தான் சிறப்பாக விளையாடியதாக கூறி அசிம் முதல் நம்பரில் நின்றார். இதன்பினர் இரண்டாவது இடத்தில் அமுதவாணனும் மூன்றாவது இடத்தில் தனலட்சுமியும் நின்றிருந்தனர்.

Dhanalakshmi and azeem convo bigg boss tamil season 6

அசிம் முதலிடத்தில் நின்றது குறித்து ஷிவின், விக்ரமன் உள்ளிட்ட பலரும் பல கேள்விகளை எழுப்ப, இதற்கு அசிம் கூறியிருந்த பதில்கள் அதிக பரபரப்பை உண்டு பண்ணி இருந்தது. என்னடா இந்த வாரம் சண்டை வரவில்லை என ரசிகர்கள் எதிர்பார்த்த சூழலில் ரேங்கிங் டாஸ்கில் நடந்த விஷயங்கள் பெரிய அளவில் சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. இதனைத் தொடர்ந்து வார இறுதியில் தோன்றிய கமல்ஹாசன் அசிமின் செயல்பாடுகள் குறித்து நிறைய கருத்துக்களை பேசி இருந்தார். இதைத் தவிர ரேங்கிங் டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் செய்தது பற்றியும் பல கருத்துக்களையும் கமல்ஹாசன் முன்வைத்ததுடன், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் எலிமினேஷனில் இருந்து Save ஆனதாகவும் கமல் அறிவித்தார்.

Dhanalakshmi and azeem convo bigg boss tamil season 6

இதனைத் தொடர்ந்து தனலட்சுமி, அசிம் மற்றும் மைனா ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் காத்திருக்க, இதில் தனலட்சுமி எலிமினேட் ஆனதாக கமல் அறிவித்தார். அப்போது சக போட்டியாளர்களிடம் இருந்து விடைபெற்ற தனலட்சுமியிடம், “இனி நீ பிக்பாஸ் தனலட்சுமி தான். யாரேனும் பிக்பாஸ் வீட்டில் இருந்து நீ என்ன எடுத்துகிட்டு வந்த?” என கேட்டால்,  “பிக்பாஸ் எனும் டைட்டிலை எடுத்துக்கொண்டு வந்ததாக சொல்லலாம்” என தன் ஸ்டைலில் மோட்டிவேட் செய்து பேசினார்.

Dhanalakshmi and azeem convo bigg boss tamil season 6

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து அசிமிடம் தனலட்சுமி பேசிய விஷயம், பெரிய அளவில் பிக்பாஸ் பார்வையாளர்கள் கவனத்தை பெற்று வருகிறது. கமல்ஹாசன் அருகே இருந்த படி அசிமிடம் பேசிய தனலட்சுமி, "அசிம் அண்ணா, நான் பக்கத்துல இருக்கும் போது உங்க கண்ணு கலங்குனத பாத்தேன். நீங்க வெளில தான் ஓகே ஓகேன்னு பண்றீங்க. எனக்கு அது புரியுது. அது எதையுமே மனசுல எடுத்துக்காம இதுக்கு மேல விளையாடுறத புதுசா விளையாடுங்க. வெளில நீங்க இருக்குற கேரக்டரையே உள்ள வெச்சு நீங்க விளையாடுங்க. அது தப்பே கிடையாது. அது கேம் தான்" என அசிமிடம் அறிவுறுத்தினார். அப்போது, "தைரியத்தை விட்டுராதீங்க தனா" என விக்ரமனும் தனலட்சுமியிடம் கூறி இருந்தார்.

Also Read | வாரிசு இசை நிகழ்ச்சியில் ஓடி வந்து உதவிய விஜய்.. நெகிழ்ச்சியில் பாடகி சொன்ன விஷயம்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Dhanalakshmi and azeem convo bigg boss tamil season 6

People looking for online information on Azeem, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmim, Vijay Television, Vijay tv will find this news story useful.