www.garudabazaar.com

“சின்னத்தம்பி பார்க்க கேர்ள் ஃப்ரண்டோட போனேன்”.. வாரிசு நிகழ்வில் குஷ்பு குறித்து விஜய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

vijay watched kushboo chinnathambi movie with girlfriend

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

vijay watched kushboo chinnathambi movie with girlfriend

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்,  “குஷ்பூ மேடத்தை பார்த்தால் எனக்கு ஒன்று நினைவுக்கு வருது. அப்போது கமலா தியேட்டரில் சின்ன தம்பி படத்தை கேர்ள் பிரண்ட் உடன் சென்று பார்த்த ஞாபகம்தான் வருது.” என கூறினார். இதை சொன்னபோது அரங்கத்தினர் ஆரவாரத்தில் கைத்தட்டினர். அந்த சமயத்தில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜே ரம்யா, “Sir sir sir அந்த girlfriend பேர் என்ன சார்?” என கேட்க, விஜய்யும் விளையாட்டாக, “நீ கொஞ்சம் வெளிய இருமா போ மா..” என கூறினார்.

தொடர்புடைய இணைப்புகள்

vijay watched kushboo chinnathambi movie with girlfriend

People looking for online information on Varisu, Vijay, Vijay watched kushboo chinnathambi movie with girlfriend will find this news story useful.