www.garudabazaar.com

Varisu : “பெருமையா இருக்கு”.. “இந்த நல்ல குணத்தையாவது கத்துக்கணும்”.. ரசிகர்களை பாராட்டிய விஜய்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Praises fans Blood Donation activity Varisu Audio Launch

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்,  “விஜய் மக்கள் இயக்க நண்பர்கள் ரத்த தானம் செய்வது பெருமையாக இருக்கிறது. எனது ரசிகர்களின் இரத்த தானம் பற்றி நான் நீண்ட காலமாகவே பேச விரும்பினேன். இனம், மதம், ஜாதி, வேறுபாடுகள் இல்லாத ஒரே விஷயம் ரத்தம். இரத்தத்தில் இருந்து குறைந்த பட்சம் இந்த ஒரு நல்ல குணத்தையாவது நாம் கற்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய விஜய், இரத்த தானம் செய்வதற்கான செயலியை தொடங்கியுள்ளதாகவும், இந்த செயலி மூலம் சுமார் 6000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ரத்த தானம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன்,  இதை சாத்தியமாக்கிய தமது வழிகாட்டிகள் மற்றும் குழு உறுப்பினர்கள், ரசிகர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளார்.

'தளபதி விஜய் குருதியகம்' என்ற பெயரில் இயங்கும் இந்த செயலி மூலம் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்னார்வலர்களாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டத்திலும் பகுதிகளில் இரத்ததான சேவையை மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றனர். இரத்ததானம் கொடுப்பவர்களுக்கும்,  இரத்தம் தேவைப்படுவோருக்கும் ஒரு இணைப்பு பாலமாக இந்த செயலி உதவுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Praises fans Blood Donation activity Varisu Audio Launch

People looking for online information on Kamal Haasan, Varisu, Varisu Audio launch, Vijay speech, Vijay Speech in Varisu will find this news story useful.