www.garudabazaar.com

காதலரின் பிறந்தநாள்😍.. ஃபோட்டோ வெளியிட்டு நெகிழ்ந்த ரகுல் ப்ரீத் சிங்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது காதலரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

Rakul Preet Singh Celebrating Her Lover Birthday

Also Read | கருப்பு X-Mas மரத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.. அவரே சொன்ன காரணம்!

32 வயதாகும் நடிகை ரகுல் ப்ரித் சிங், இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர்.

இவர் தெலுங்கு & இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர். ரகுல் ப்ரீத் சிங், தற்போது சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்திலும் நடித்து வருகிறார்.

Rakul Preet Singh Celebrating Her Lover Birthday

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரகுல் பிரித் சிங் முக்கியமானவர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை சுமார் 23 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ரகுல் பிரித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Rakul Preet Singh Celebrating Her Lover Birthday

ஜாக்கி பாக்னானி தமிழில் திரிஷாவுடன் மோகினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக, நடிகராக வலம் வருபவர் தான் ஜாக்கி.

நடிகை ரகுல் ப்ரீத் சிங், சமீபத்தில் தனது பிறந்தநாளை காதலருடன் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர் ஜாக்கி பாக்னானி கலந்து கொண்டார்.

Rakul Preet Singh Celebrating Her Lover Birthday

இந்நிலையில் தனது காதலரின் பிறந்தநாளுக்கு நடிகை ரகுல் ப்ரீத் சிங் வாழ்த்து கூறியுள்ளார். அதில், "சாண்டா எனது வாழ்க்கைக்கான சிறந்த பரிசைக் கொடுத்துள்ளார், அது நீங்கள் தான்.. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே ❤️.... என் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் நிரப்பியதற்கு நன்றி .. என் அமைதியான காரணியாக இருந்ததற்கு நன்றி 😜நீங்கள் விரும்பும் அனைத்தையும் நீங்கள் வெல்ல விரும்புகிறேன் .. எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள் ❤️😘" என ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)

Also Read | திருமணத்துக்கு பிறகு மீண்டும் பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா.. வெளியான ப்ரோமோ

தொடர்புடைய இணைப்புகள்

Rakul Preet Singh Celebrating Her Lover Birthday

People looking for online information on Rakul Preet Singh will find this news story useful.