www.garudabazaar.com

Varisu : “90களில் எனக்கு போட்டியா ஒரு நடிகர் வந்தாரு..” - ‘வாரிசு’ விழாவில் மனம் திறந்த விஜய்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Vijay Opens Up about his competitor Varisu Vijay Speech

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடலை விஜய் மற்றும் மானஸி ஆகியோர் பாடி இருந்தனர். இதற்கு அடுத்தபடியாக, வெளியான 'தீ தளபதி' பாடலை சிலம்பரசன் மற்றும் ஹரிகா ஆகியோர் பாடி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வாரிசு படத்தின் 3 ஆவது சிங்கிள் 'Soul Of Varisu' வெளியாகி இருந்தது. இதனை பிரபல பாடகி சித்ரா பாடி இருந்தார். மூன்று பாடல்களுமே தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால், எஸ் தமன் இசையில் உருவாகி உள்ள மீதி பாடல்களை கேட்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

மேலும் வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Vijay Opens Up about his competitor Varisu Vijay Speech

இதனை தொடர்ந்து இப்படத்தின் இசை விழாவில் பேசிய விஜய், “வாய்ப்பு நமக்கு கிடைக்கும்போதெல்லாம் நன்றி சொல்லணும். என்னை உருவாக்கிய உளிகளுக்கு நன்றிகள்.” என பேசத் தொடங்கியவர், ஒரு அண்ணன் - தங்கை குட்டிக்கதையை கூறினார். தொடர்ந்து பேசியவர் இன்னொரு குட்டிக்கதையாக, “90களில் எனக்கு போட்டியாக ஒரு நடிகர் வந்து எனக்கு எதிராக நின்றுவிட்டார்.

அவரை ஜெயிக்க நான் ஓடினேன். ஆனால் அவர் எங்கு போனாலும் அவரும் வந்துவிட்டார். நானும் அவரை ஜெயிக்க வேண்டும் என்று கடினமாக ஓடினேன்.  அவரை விடவும் வெற்றியை அடைய நினைத்தேன். ஆனால் அப்படியான போட்டியாளர்கள் தேவை. அந்த போட்டியாளர் உருவான வருசம் 1992. அந்த போட்டியாளர் யாருமல்ல, அவர் தான் ஜோசப் விஜய். ஆமா, நானே எனக்கு போட்டி. உங்களுடன் உங்களுக்கு நீங்களே முதலில் போட்டி போடுங்கள்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Opens Up about his competitor Varisu Vijay Speech

People looking for online information on வாரிசு, Varisu, Varisu Kutty Story, Varisu Vijay Speech, VarisuAudioLaunch, Vijay Kutty Story, Vijay speech will find this news story useful.