“ஒரு கடிதம் எழுதினேன்.. எழுதியதும் அதை கிழிச்சது ஏனோ?” - பிக் பாஸிடம் சிக்கிய ஷெரின்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 24, 2019 04:59 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பழைய சீசன் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

பிக் பாஸ் போட்டியில் கடந்த வாரம் முழுவதும் நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சிறப்பாக விளையாடி, நேரடியாக ஃபைனல்ஸ்க்கு செல்லும் வாய்ப்பை முகென் ராவ் பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த எலிமினேஷனில் லாஸ்லியாவை விட சற்றே குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் போட்டியில் இருந்து சேரன் வெளியேறினார்.
இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் வித்தியாசமாக நடைபெற்று முடிந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 2-வில் பங்கேற்ற மிகவும் பிரபலமான யாஷிகா மற்றும் மகத் ஆகியோர் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர்.
இவர்கள் பிக் பாஸின் ஆலோசனைப்படி போட்டியாளர்களுக்கு டாஸ்குகளை கொடுத்து வருகின்றனர். அதன் படி இரண்டாவது புரொமோவில், தர்ஷன் ராஜாவாகவும், மற்ற போட்டியாளர்கள் அவருக்கு சேவகம் செய்வது போலவும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள 3வது புரொமோவில், ஷெரின் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும், அந்த கடிதம் யாருக்கு, அதில் என்ன இருக்கு என்றும் திரையில் காட்டப்படாது என கூறப்பட்டது.
அதை நம்பி ஷெரின் கடிதம் எழுத.. அந்த கடிதத்தில் “மேகமான எனது வாழ்வில் ஒளியாக தோன்றினாயே, உன்னிடம் நிறைய சொல்ல வேண்டும்.. என் வாழ்வில் இருளில் அடித்த வெளிச்சம் நீ..” என எழுதியிருந்தார்.
ஆனால், பிக் பாஸ் மகத் மற்றும் யாஷிகாவிடன், ஷெரினை அந்த கடிதம் யாருக்கு எழுதியது, என்ன இருக்கிறது என படித்து காட்ட வையுங்கள் என்றார். ஆனால், ஷெரின் ஏன் அவசர அவசரமாக அதனை கிழித்துப்போட்டார் என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காணலாம்.
“ஒரு கடிதம் எழுதினேன்.. எழுதியதும் அதை கிழிச்சது ஏனோ?” - பிக் பாஸிடம் சிக்கிய ஷெரின் வீடியோ