“போதும் பிக் பாஸ் என்னால இத பார்க்க முடியல..” - தர்ஷனுக்காக உருகும் சனம் ஷெட்டி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 24, 2019 10:48 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

பிக் பாஸ் போட்டியில் கடந்த வாரம் முழுவதும் நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் சிறப்பாக விளையாடி, நேரடியாக ஃபைனல்ஸ்க்கு செல்லும் வாய்ப்பை முகென் ராவ் பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த எலிமினேஷனில் லாஸ்லியாவை விட சற்றே குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் போட்டியில் இருந்து சேரன் வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரத்துக்கான எவிக்ஷன் நாமினேஷனில் பச்சை மிளகாயை சாப்பிட்டு காப்பாற்ற விரும்பும் போட்டியாளர்களை காப்பாற்றலாம் என பிக் பாஸ் அறிவித்தார். இதற்காக கன்ஃபெஷன் ரூமிற்கு வந்த தர்ஷன் ஷெரினை காப்பாற்ற விரும்புவதாக கூறி, சற்றும் யோசிக்காமல் பச்சை மிளகாயை மிட்டய் போல் கடித்து சாப்பிட்டார்.
தர்ஷன் பச்சை மிளகாய் சாப்பிட்ட புரொமோ வீடியோவை பார்த்த அவரது தோழியும், முன்னாள் காதலியுமான நடிகை சனம் ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், “என்னது இது..? இது அவரது உடல்நலத்தை பாதிக்கும்.. போதும் பிக் பாஸ்.. இது நல்லா இல்ல.. இதை என்னால பார்க்க முடியல..” என கூறியுள்ளார்.