KAAPAN USA OTHERS

“சீரியஸா இருங்க..”- நாமினேஷனில் காமெடி பண்ணி பிக் பாஸிடம் திட்டு வாங்கிய லாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் மிகவும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

Losliya green chilli to save kavin Bigg Boss Tamil 3 Promo 2

பிக் பாஸ் வீட்டில் இருந்து சேரன் வெளியேறியதைத் தொடர்ந்து இந்த வாரத்துக்கான நாமினேஷன் புராசஸ் கன்ஃபெஷன் ரூமில் நடைபெற்றது. இது தொடர்பான முதல் புரொமோ வீடியோவில், ஷெரினை காப்பாற்ற நினைத்த தர்ஷன் அவருக்காக பச்சை மிளகாயை மிட்டாய் போல் கடித்து சாப்பிட்டார்.

அதையடுத்து தற்போது வெளியாகியுள்ள புரொமோவில், கவினை காப்பாற்ற நினைப்பதாக கூறிய லாஸ்லியாவிடம் அவருக்காக பச்சை மிளகாயை சாப்பிட சொன்ன போது, அய்யயோ இதென்ன விவகாரமான டாஸ்க்காக இருக்கும்போலயே என்ற மைண்ட் வாய்ஸுடன் லாஸ்லியா, சிரித்துக் கொண்டு என்னால் சாப்பிட முடியுமா முடியாத தெரியல பிக் பாஸ் என்றார்.

நாமினேஷனில் சீரியஸாக இல்லாமல் சிரித்துக் கொண்டிருந்த லாஸ்லியாவை பிக் பாஸ் பச்சை மிளகாயை சாப்பிட வைத்தாரா இல்லையா என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

“சீரியஸா இருங்க..”- நாமினேஷனில் காமெடி பண்ணி பிக் பாஸிடம் திட்டு வாங்கிய லாஸ் வீடியோ