பிக் பாஸ் Race-ல் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 23, 2019 12:38 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டியாளர்களுக்கு கடுமையான பிசிக்கல் டாஸ்குகள் கொடுக்கப்பட்டன.

இதனால் வி ஆர் பாய்ஸ் என கெத்தாக சுற்றிய போட்டியாளர்களுக்கு நடுவே மனகசப்பு ஏற்பட்டது. இதில் குறிப்பாக நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே அண்ணன், தம்பியாக அனைத்து தருணங்களிலும் நெருக்கமான நண்பர்களாக சுற்றி வந்த கவின், சாண்டி இடையே சற்று விரிசல் ஏற்பட்டது. பின்னர், வாரா வாரம் இறுதி நாட்களில் எண்ட்ரி கொடுக்கும் கமல்ஹாசன் தனக்கே உரிய ஸ்டைலில் இவர்களது சண்டை பற்றி கேள்வியும், அறிவுரையும் சொன்னார்.
இதையடுத்து, நேற்றைய எபிசோடில் எவிக்ஷன் நடைபெற்றது. எவிக்ஷனில் நாமினேட் ஆகியிருந்த வலுவான போட்டியாளர்களான கவின், ஷெரின், லாஸ்லியா, சேரன் ஆகியோரில் யாரும் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் சேரன் எலிமினேட் ஆனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே வயது வெறும் நம்பர் தான் என்பதை அழுத்தமாக கூறியது மட்டுமின்றி, இளம் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாகவே இருந்தவர் சேரன். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு அன்பும், அரவணைப்பும், அறிவுரைகளையும் கூறி ஒரு தகப்பனாகவே தன்னை நிரூபித்த சேரன், மகளாக பாவித்த லாஸ்லியாவுக்கு சற்றே கூடுதல் வாக்குகள் விழ, பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்வதற்கு முன் போட்டியை விட்டு வெளியேறினார்.